fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 2024-2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 687 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.44 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பதக்கங்கள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என மொத்தம் 21,808 நபர்கள் இணையவழியாக பதிவேற்றம் செய்து, அதில் 17,546 நபர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றனர். இதில் வெற்றி பெற்ற 687 வீரர் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.1,000 என மொத்தம் ரூ.44 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற 687 வீரர், வீராங்கனைகளுக்கு மாநில அளவில் முதலமைச்சர் போட்டிகள் 04.10.2024 முதல் 24.10.2024 வரை சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இவ் வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால், தனி வட்டாட்சியர் ஜெய்சங்கர், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மற்றும் போட்டி பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img