fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

நாமக்கல் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் காதி கிராப்ட் கதர் விற் பனை அங்காடியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, கதர் மற்றும் கிராம பொருள் ரகங்கள் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் அங்கு பேசுகையில், “2023-2024-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்ப னையின் போது ரூ.92 லட்சம் மதிப்புள்ள கதர் மற்றும் கிராம பொருள் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாவட் டத்திற்கு ரூபாய் 176 லட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரி யத்தால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு அனைத்து அரசு அலு வலர்களுக்கும் ஆசி ரியப் பெருமக்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கதர் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30%ம், குறிப்பிட்ட பட்டு ரகங்க ளுக்கு 50%ம் மத்திய மாநில அரசுகளால் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த கேட்டு கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேன், குளியல் சோப்புகள் மற்றும் சலவைசோப்புகள், பத்தி, சாம்பிராணி, மெழு குவர்த்தி, ஜவ்வாது, வலி நிவாரணி தைலம், ஷாம்பு மற்றும் காலணிகள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வகையான கிராமப் பொருட்கள் கதரங்காடியில் விற்ப னைக்கு தயார் நிலையில் உள்ளது.

எனவே, பொதுமக்கள் அரசின் தள்ளுபடி விற்பனையை பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img