fbpx
Homeபிற செய்திகள்ரோட்டரி சங்கம் சார்பில் கிராம பள்ளி மாணவர்கள் 350 பேர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகள்

ரோட்டரி சங்கம் சார்பில் கிராம பள்ளி மாணவர்கள் 350 பேர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகள்

ரோட்டரி மாவட்டம் 3201 சேர்ந்த கோவை கிழக்கு ரோட்டரி சங் கம் மற்றும் கோவை மாவட்ட விளையாட்டு நலச் சங்கம் இணைந்து, காந்தி ஜெயந்தி அன்று சின்ன வேடம் பட்டியில் உள்ள டி.கே.எஸ். மெட்ரிகுலேசன் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தினர்.

நிகழ்வில் 21 கிராம பள்ளிகளில் இருந்து சுமார் 350 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று போட்டியில் கலந்து கொண்டார்கள். போட்டி காலை 7.30 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

போட்டிகள் 12 வயதுக்கு கீழ் மாணவர்களுக்கு மற்றும் 15 வயதிற்கு கீழ் மாணவர்களுக்கு என இரண்டு பிரிவாக நடை பெற்றது. போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெற்று வெற்றிபெற்ற அணிகளுக்கு மெடல்கள் ,கோப்பைகள், சுழல் கோப்பை ஆகியவைகளை ஸ்பான்சர் செய்த கோவை கிழக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள்.

கௌமார மடாலயத் தின் நடராஜன், ரோட்டரி மாவட்ட 3201 மாவட்ட இளைஞர் பணி தலைவர் காட்வின் மரியம் விசுவாசம், கிழக்கு ரோட்டரி தலைவர் ராஜ் சித்தார்த், செயலாளர் கார்த்திக் நரேன், இளைஞர் பணி தலைவர் செல்வ குமார், நிகழ்ச்சியின் தலைவர் ரமேஷ்குமார், உதவி தலைவர் ஸ்ரீனிவாசன் மற் றும் முன்னாள் தலைவர்கள் சஞ்சீவிகுமார், ராமசாமி ரொட்டேரியன் பாலசுந்தரம் ஆகியோர் பரி சுகளை வழங்கினார்கள்.

இந்த போட்டிகள் மற்றும் விழா நிகழ்ச்சிகளை கோவை மாவட்ட விளையாட்டு நல சங் கத்தின் செயலாளர் சண்முகசுந்தரம், கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் ரமேஷ்குமார், ஸ்ரீனிவாசன் முன்னின்று நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img