fbpx
Homeபிற செய்திகள்பேரிடர்கள் வருமுன் காக்க வந்துவிட்டது புதிய செயலி!

பேரிடர்கள் வருமுன் காக்க வந்துவிட்டது புதிய செயலி!

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அதனால் இந்த ஆண்டு பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் பற்றியத் தகவல்கள் பொதுமக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தால் அவர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட வசதியாக இருக்கும்.

அதனால் தான் தான் தமிழக அரசு சார்பில் TN-Alert என்னும் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இப்போது இந்த செயலியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார். இது, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது.

இச்செயலியின் மூலம் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.

இந்த செயலியில் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.

பேரிடர் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்தச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரிடர் குறித்த வானிலை முனனெச்சரிக்கையினை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும்.

தமிழக அரசின் இந்த செயலி, எந்த பேரிடர் நிகழ்ந்தாலும் பொருட்சேதத்தை குறைக்கலாம், உயிர்ச்சேதத்தை முற்றிலும் தவிர்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவிடும் என்பதில் சந்தேகமில்லை.

TN-Alert செயலியை, கூகுள் பிளே ஸ்டோர், மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயனடையலாம். அதோடு மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் இந்த செயலி குறித்த விழிப்புணர்வையும் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டியதும் அவசியம்.

புயல், மழை, வெள்ளம் வருவது இயற்கை; அதனைத் தடுக்க முடியாது. ஆனால் வருவதை முன்னரே அறிவிக்கத் தான் வருமுன் காக்கும் செயலி வந்து விட்டதே.
இனி கவலை எதற்கு?

படிக்க வேண்டும்

spot_img