fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம் மற்றும் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் கண் பார்வையற்றோர்,...

கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம் மற்றும் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் கண் பார்வையற்றோர், குடும்பத்தினருக்கு இலவச பொது மருத்துவ முகாம்

கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம் மற்றும் ராயல் கேர் மருத்துவமனை சார்பில், வெள்ளலூர் அரசண்ணன் திருமண மண்டபத்தில் கண் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடந்தப்பட்டது.

இதில் கோவை, திருப்பூர் சேலம், கரூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், திரு நெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த 150 க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களை ஸ்பின் சிட்டி அரிமா சங்கத்தினர் வழங்கினர். நிகழ்ச்சியில் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை கோவை ஸ்பின்சிட்டி அரிமா சங்க தலைவர் ஆனந்தன், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் நாக மாணிக்கம் உள்ளிட்ட நிர் வாகிகளும், கிருபையின் வெளிச்சம் பொதுநல அறக் கட்டளையின் மகேந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

முடிவில் அனைவ ருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img