fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு சொற்களை பெற்றோர்கள் புத்தகம் வாசித்து திரட்ட வேண்டும்

குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு சொற்களை பெற்றோர்கள் புத்தகம் வாசித்து திரட்ட வேண்டும்

தருமபுரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, சாரதி புத்தகாலயம் இணைந்து 6 ஆவது புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. 5 ஆம் நாள் புத்தகத் திருவிழா நிகழ்விற்கு அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் தலைமை வகித்தார்.

செந்தில் குழும நிறுவன செந்தில் கந்தசாமி, தொழிலதிபர் சக்திவேல், தருமபுரி தீபா சில்க்ஸ் சம்பத். தொல்லியல் துறை இணை இயக்குநர் (ஓய்வு) முனைவர் தி.சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கவிஞர் சம்பத்ஜி, வழக்குரைஞர் பி.மாதேஷ், கலைமகள் கல்வி நிறுவனங்கள் ஆர்.நடராசன், ஜெயம் சமுதாய வள மைய சங்கம் வி.கென்னடி மகேஷ், கடத்தூர் விமலா நகைக்கடை மு.சரண்யகுமார், அழகு அரூர் அறக்கட்டளை இரா.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா “தேர்ந்து படி” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், பாலின சமத்துவ அறிவினை தரும் புத்தகத்தை வாசிப்பது அவசியம். குழந்தைகளிடம் அதிக வளமான சொற்களை கொண்டு சேர்க்க வேண்டும். குழந்தைகளிடம் அதிக சொற்கள் கொண்டு சேர்க்க பெற்றோர்கள் புத்தக வாசிப்பு மூலம் சொற்கள் திரட்ட வேண்டும். பெற்றோர்கள் மூலம் குழந்தைகளுக்கு எண்ணற்ற சொற்கள் பெறுகின்றனர். குழந்தைகளிடம் அதிகமாக உரையாட வேண்டும். குழந்தைகளுக்கான புத்தகம் நம் வீட்டில் அவசியம் இருக்க வேண்டும் என்றார். தருமபுரி அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் கு.சிவப்பிரகாசம் வரவேற்று பேசினார். கூட்டுறவுத்துறை யு.ஈஸ்வர் ராஜா நன்றி கூறினார். கே.சின்னக்கண்ணன் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img