fbpx
Homeபிற செய்திகள்ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்: நிர்மலா மகளிர் கல்லூரி பேராசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்: நிர்மலா மகளிர் கல்லூரி பேராசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் மார்னிங் ஸ்டார் கலையரங்கத்தில் நடந்த விழாவில் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியரும் தமிழ்த்துறையின் தலைவருமான முனைவர் ப.மகேஸ்வரிக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.

கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், முதல்வர் முனைவர் அருட் சகோதரி மேரி பபியோலா ஆகியோர் செ.வெ.ரெக்கார்டு போரம் புதுச்சேரி வழங்கிய விருதுச் சான்றிதழையும், பதக்கத்தையும் கொடுத்துப் பாராட்டி வாழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் மேன்மதி கோவை தமிழ் மன்றத்தின் நிறுவனர் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் மு.சிவசக்தி, கோவை இரத்ன வாணி வானொலி நிலையத்தின் இயக்குனர் மகேந்திரன் மற்றும் ஷாஜி ஆபிரகாம் (இயக்குநர், சௌதர்ன் ஐரோப்பியா) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பேராசிரியருக்கு கல்லூரி நிர்வாகமும், பலதுறை பேராசிரியர்களும் தங்களது பாராட்டுதல் களையும், வாழ்த்துதல்களையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img