fbpx
Homeபிற செய்திகள்116 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் யுனெஸ்கோ அந்தஸ்து நீலகிரி மலை ரயில்

116 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் யுனெஸ்கோ அந்தஸ்து நீலகிரி மலை ரயில்

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதையில் 16 குகைகளும்,216 வளைவுகளும்,250 பாலங்களும் உள்ளன.

ஆசியாவின் மிகவும் செங்குத்தான மற்றும் நீளமான மீட்டர் கேஜ் ரயில் பாதையை கொண்டு இந்த ரயில் இயங்கி வருகிறது. கடந்த 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் தான் இந்தியாவில் தற்போது இயங்கும் ஒரே ரேக் ரயிலாகும்.இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி ஊட்டி வரை இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய பெருமை கொண்ட இந்த மலை ரயிலை யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை.15 ஆம் தேதி உலகின் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.மேலும்,இந்த ரயில் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதால் “ பொம்மை ரயில் “(TOY TRAIN) என்ற செல்ல பெயரைப்பெற்று அழைக்கப்பட்டு வருகிறது.

அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே,மலை முகடுகளுக்கு இடையே,இதமான சூழலில்,பசுமை போர்த்திய புல்வெளிகளை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.

இந்த மலை ரயிலில் பயணம் செய்ய கோவை,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு உள்மாவட்டங்கள்,கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது,வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி மலை ரயில் சேவை துவங்கி இன்றுடன் 116 ஆண்டுகள் ஆகிறது.இதனை கொண்டாட சுற்றுலா பயணிகள், ரயில் பயணிகள் சங்கத்தினர், பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img