fbpx
Homeபிற செய்திகள்ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை சார்பில் 3 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்

ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை சார்பில் 3 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்

ஒளிரும் ஈரோடு அறக் கட்டளை சார்பில் ‘விதை சிறிது, விடை பெரிது 3.0’ திட்டத்தில் 3 லட்சம் மரக்கன்றுகள் மாணவ- மாணவிகளுக்கு வழங்கும் திட்டத்தை முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் தொடக்க விழா நத்தக் காடையூரில் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று, 2,500 மரக் கன்றுகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கவர்னர் எஸ்.சுரேஷ் பாபு, கல்லூரி தலைவர் என்.ராமலிங்கம், பொருளாளர் சி.கே.பால சுப்பிரமணியம், ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை தலைவர் எம்.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘விதை சிறிது விடை பெரிது 3.0’ என்ற பசுமை திட்டத்தின் படி மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாண விகள் ஒவ்வொருவ ருக்கும் ஒரு மரக்கன்று அவர்களது விருப்பத்தின் அடிப் படையில் வழங்கப்படும் என்றும், மேலும், நிலத்தில் மரக்கன்றுகள் வளர்க்க விரும்புவோருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும்.3 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்

படிக்க வேண்டும்

spot_img