fbpx
Homeபிற செய்திகள்கோவை ஏ.ஜே.கே. கல்லூரியில் இனிப்பு சமையல் போட்டி

கோவை ஏ.ஜே.கே. கல்லூரியில் இனிப்பு சமையல் போட்டி

கோவை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி யின் உணவளிப்பு அறிவி யல் மற்றும் உணவக மேலாண்மையியல் துறை சார்பில் உலக சமையல் நிபுணர்கள் நாளை முன்னிட்டு “வளர்ந்து வரும் சிறந்த சமையல்காரர்கள்” என்ற கருப் பொருளை மையமாக வைத்து அனைத்து துறை களுக்கிடையேயான இனிப்பு சமையல் போட்டி “டெசர்ட் டூயல்” என்ற தலைப்பில் ஏ.ஜே.கே. கல்லூரி பயிற்சி சமையலறையில் நடைபெற்றது.

இதில், கௌரவ விருந்தினராக கோவை ரெஸிடென்சி உணவக தலைமை சமையல் கலை நிபுணர் முகமது சமீம், ஜே கலந்து கொண்டு பேசினார். ஆரோக்கியமான வாழ்க் கைக்கு ஆரோக்கிய மான உணவு அவசியம் என்று வலியுறுத்தினர்.
நிகழ்வில் ஏ.ஜே.கே கல்லூரி முதல்வர் ராஜூ துவக்க உரையாற்றினார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வித விதமான இனிப்புகளான அரேபியன் புட்டிங் டிலைட், கேரட் டிலைட், பிரட் கஸ்டட், உக்கரை, கேசரி ரோல் என 50க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகளை சமைத்துக்காட்டி அசத்தினர்.

வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரியின் செயலர் அஜீத் குமார் லால் மோகன் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img