fbpx
Homeபிற செய்திகள்கோடாங்கிபாளையம் ஊராட்சியில் கனவு இல்ல திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

கோடாங்கிபாளையம் ஊராட்சியில் கனவு இல்ல திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கோ டாங்கிபாளையம் ஊராட்சி பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்கள். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் அவிநாசி ஒன்றியத்தில் 58 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடி மதிப்பீட்டிலும், தாராபுரம் ஒன்றியத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி மதிப்பீட்டிலும், குடிமங்கலம் ஒன்றியத்தில் 210 பயனாளிகளுக்கு ரூ.7.35 கோடி மதிப்பீட்டிலும், மட த்துக்குளம் ஒன்றியத்தில் 135 பயனாளிகளுக்கு ரூ.4.72 கோடி மதிப்பீட்டிலும், மூலனூர் ஒன்றியத்தில் 62 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டிலும், பல்லடம் ஒன்றியத்தில் 162 பயனாளிகளுக்கு ரூ.5.67 கோடி மதிப்பீட்டிலும், பொங்கலூர் ஒன்றியத்தில் 77 பயனாளிகளுக்கு ரூ.2.69 கோடி மதிப்பீட்டிலும், குண்டடம் ஒன்றியத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ.5.95 கோடி மதிப்பீட்டிலும், காங்கேயம் ஒன்றியத்தில் 140 பயனாளிக ளுக்கு ரூ.4.90 கோடி மதிப்பீட்டிலும், திருப்பூர் ஒன்றியத்தில் 65 பய னாளிகளுக்கு ரூ.2.27 கோடி மதிப்பீட்டிலும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 271 பயனாளிகளுக்கு ரூ.9.48 கோடி மதிப்பீட்டிலும்,
உடுமலைப் பேட்டை ஒன்றியத்தில் 234 பயனாளிகளுக்கு ரூ.8.19 கோடி மதிப்பீட்டிலும், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 94 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பீட்டி லும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் அவிநாசி ஒன்றியத்தில் 290 பய னாளிகளுக்கு ரூ.2.40 கோடி மதிப்பீட்டிலும், தாராபுரம் ஒன்றியத்தில் 83 பயனாளிகளுக்கு ரூ.55.72 லட்சம் மதிப்பீட்டிலும், குடிமங்கலம் ஒன்றியத்தில் 78 பயனாளிகளுக்கு ரூ.63.97 லட்சம் மதிப்பீட்டி லும், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 111 பய னாளிகளுக்கு ரூ.70.20 லட்சம் மதிப்பீட்டிலும், மூலனூர் ஒன்றியத்தில் 125 பயனாளிகளுக்கு ரூ.66.27 லட்சம் மதிப்பீட்டிலும், பல்லடம் ஒன்றியத்தில் 109 பயனாளிகளுக்கு ரூ.65.67 லட்சம் மதிப்பீட்டிலும், பொங்கலூர் ஒன்றியத்தில் 308 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பீட்டிலும், குண்டடம் ஒன்றியத்தில் 78 பயனாளிகளுக்கு ரூ.45.69 லட்சம் மதிப்பீட்டிலும், காங்கேயம் ஒன்றியத்தில் 48 பயனாளிகளுக்கு ரூ.43.15 லட்சம் மதிப்பீட்டிலும், திருப்பூர் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும், வெள்ளகோவில் ஒன்றி யத்தில் 85 பயனாளிக ளுக்கு ரூ.78.60 லட்சம் மதிப்பீட்டிலும், உடுமலைப் பேட்டை ஒன்றியத்தில் 254 பயனாளிகளுக்கு ரூ.3.04 கோடி மதிப்பீட்டிலும், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 134 பயனாளிகளுக்கு ரூ.76.13 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் திருப் பூர் மாவட்டத்தில் 3,551 பயனாளிகளுக்கு ரூ.74.66 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லடம் ஊராட்சி ஒன்றியம், பருவாய் ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த செய்தியாளர் பயணத்தின் போது, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், வட்டார உதவி பொறியாளர் செந்தில் வடிவு, செய்தியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img