fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் கலைஞர் கனவு இல்ல கட்டுமானம் மற்றும் வீடு பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் கலைஞர் கனவு இல்ல கட்டுமானம் மற்றும் வீடு பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், சுண்டேகுப்பம், எர்ர ஹள்ளி பையூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் நடைபெற்று வரும் கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள் மற்றும் வீடு பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 74 பயனாளிகளுக்கும், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் 966 பயனாளிகளுக்கும், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 840 பயனாளிகளுக்கும், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 94 பயனாளிகளுக்கும், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் 143 பயனாளிகளுக்கும், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 119 பயனாளிகளுக்கும், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 199 பயனாளிகளுக்கும், தளி ஊராட்சி ஒன்றியத்தில் 172 பயனாளிகளுக்கும், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 588 பயனாளிகளுக்கும் மற்றும் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 886 பயனாளிகள் என மொத்தம் 10 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 4081 பயனாளிகளுக்கு ரூ.142 கோடியே 83 இலட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது.
தற்போது, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 74 பயனாளிகளுக்கும், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் 820 பயனாளிகளுக்கும், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 793 பயனாளிகளுக்கும், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 82 பயனாளி களுக்கும், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் 143 பயனா ளிகளுக்கும், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 118 பயனாளிகளுக்கும், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 193 பயனாளிகளுக்கும், தளி ஊராட்சி ஒன்றியத்தில் 164 பயனாளிகளுக்கும், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 560 பயனாளிகளுக்கும் மற்றும் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 880 பயனாளிகள் என மொத்தம் 3,827 பயனாளிகளின் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் வீடுகள் பழுது பார்ப்பு திட்டத்தின் கீழ் 248 வீடுகள் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் சுண்டேகுப்பம் ஊராட்சியில் ரூ. 22 லட் சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவ்வாய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. சுப்பிரமணி, திரு.சரவணன்,
ஒன்றிய பொறியாளர் கள் தமிழ்செல்வி, சௌந்தர் ராஜன், ஜென்சி, பணி மேற்பார்வையாளர்கள் அம்பிகா, கல்பனா, சுண் டேகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சௌந்தரராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img