fbpx
Homeபிற செய்திகள்காளப்பட்டி பகுதியில் உள்ள சந்திரமாரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காளப்பட்டி பகுதியில் உள்ள சந்திரமாரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காளப்பட்டி பகுதியில் உள்ள சந்திரமாரி சர்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தாங்கள் தயாரித்த படைப்புகளை கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர்.

கண்காட்சியை முன்னாள் ராணுவ துறை இயக்குனர் மோகன்தாஸ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பள்ளித் தாளாளர் டாக்டர். சுமதி முரளி குமார் தலைமை தாங்கினார்.

முதல்வர் விஷால் பந்தாரி வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர்கள் டாக்டர் கௌதம் சந்துரு, டாக்டர் விஜய் சந்துரு மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என திரளாக பலர் கலந்து கொண்டனர்.

சந்திரமாரி சர்வதேசப் பள்ளி அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப் புகளில் சிறப்புக்குரிய விஷயங்களாக பார்வையற்றோர்களுக்கு தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடியில் மற்றும் கைத்தடியில் சிப் வசதி பொருத்தப்பட்ட சென்சார் வடிவமைப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து பள்ளித்தாளாளர் டாக்டர் சுமதி முரளி குமார் பேசும் போது: படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி அறிவோடு அறிவுபூர்வமான தேடல்களுக்கும் முதலிடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இராணுவ அதிகாரி மோகன்தாஸ் கூறுகையில், “தற்போதைய இளம் பருவ மாணவ மாணவிகளுக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பது மிக அரிது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img