fbpx
Homeபிற செய்திகள்இந்திய அளவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டி: கே.பி.ஆர் கல்லூரி என்.சி.சி அதிகாரி சாதனை

இந்திய அளவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டி: கே.பி.ஆர் கல்லூரி என்.சி.சி அதிகாரி சாதனை

கோயம்புத்தூர் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் என்.சி.சி அதிகாரி லெப்டினண்ட் எஸ்.ஸ்ரீதர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் காம் டீயில் உள்ள என்.சி.சி அதிகாரிகளுக்கான பயிற்சி அகாடமியில் கடந்த மாதம் ஜீலை 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 9ம் தேதி வரையிலான மூன்று மாதப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சியினைப் பெற்றார்.

இப்பயிற்சி முகாமில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ராணு வம், கப்பல் மற்றும் விமானப் படை உள்ளடக்கிய 17 துறையைச் சார்ந்த 520 கேடட் அதிகாரிகள் டிரெக்டிரேட்களிலிருந்து கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாட்டின் சார்பாக 40 கேடட்கள் அதிகாரி பங்கு பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இதில் க்ரூப்பிங் தூப்பாக்கிச் சுடுதலில் கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியைச் சார்ந்த 4 (தமிழ்நாடு) என்.சி.சி அதிகாரி லெப்டினன்ட் எஸ்.ஸ்ரீதர், இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

இந்நிலையில், முத லிடம் பெற்ற என்.சி.சி அதிகாரி லெப்டினண்ட் எஸ்.ஸ்ரீதரை கே.பி.ஆர் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி பாராட்டினார்.
தொடர்ந்து கேபிஆர் கலைக்கல்லுரியின் செயலர் காயத்ரி அனந்த கிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் முதல்வர் பி.கீதா ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img