fbpx
Homeபிற செய்திகள்கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அனஸ்தீஸியா கருத்தரங்கு

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அனஸ்தீஸியா கருத்தரங்கு

அனஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்து மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் அதிநவீன முன்னேற்றங்கள் குறித்து கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மேம்பட்ட நுணுக்கத்துடனும் நோயாளிகளுக்கு சிறந்த பலனளிக்கக் கூடியதும் பக்கவிளைவுகள் குறைந்தது மான அனஸ்தீஸியா முறைகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

துவக்க விழாவில் கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், “அனஸ்தீஸியா என்பது வெறும் மயக்க மருந்து என்பதோடு மட்டுமல்லாமல் அதை நோயாளிக்கு கொடுப்பதில் உள்ள நுணுக்கம், நோயாளியின் சௌகரியம், விரைவான குணமடைதல் முதலான பல்வேறு அம்சங்களுடன் மேம்பட்ட மயக்கவியல் நுட்பமாக மாறியுள்ளது.

இத்துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு இதுபோன்ற கருத்தரங்கு உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

முன்னதாக உதவி தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, டாக்டர் முருகன் மற்றும் டாக்டர் ரவிக்குமார் முதலானோர் பங்கேற்றனர்.

இதில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கு ஏற்பாட்டு குழு செயலாளர் டாக்டர் சுப்பையா செல்லையா நன்றியுரை நிகழ்த் தினார்.

படிக்க வேண்டும்

spot_img