fbpx
Homeபிற செய்திகள்அனோகா டெக்பெஸ்டில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

அனோகா டெக்பெஸ்டில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோயம்புத்தூர்- அனோகா 2024, அம்ருதா விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர் வளாகத்தின் தேசிய டெக்பெஸ்ட், அதன் 12வது பதிப்பை அக்டோபர் 17 முதல் 19ம் தேதி வரை நடத்தி நிறைவு செய்தது.

இது 300 பள்ளி மாணவர்கள் உட்பட 3000 பார்வையாளர்களை ஈர்த்தது. சுமார் 6111 மாணவர்கள் பதிவுகளை டெக்பெஸ்ட் பதிவு செய்தது. ஜெனரேட்டிவ் ஏஐ, ரோபோடிக்ஸ் போன்ற பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட பட்டறைகள் நடத்தப்பட்டன.
அனோகா லுமியர் பேச்சுத் தொடரில், இந்திய ரயில்வேயில் பொறியியல் சிறப்பைப் பற்றி சுதன்ஷு மணி பேசினார். தலைமை மற்றும் பின்னடைவு பற்றிய நுண்ணறிவை மேஜர் தீபக் பேசினார். தொடர்ந்து, கல்கி சுப்பிரமணியம் உரையாற்றினார். பின்னர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அனோகா 2024 ஐசிஐசிஐ வங்கி, தனலக்ஷ்மி வங்கி, ப்ராமினன்ஸ், எஸ்பிஐ மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் – டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியர்ஸ், (ஐஇடிஇ) கோயம்புத்தூர் மையம் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.
ஏற்பாட்டுக் குழுவில் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீவல்சன் மற்றும் டாக்டர் பிரசாந்த் ஆர். நாயர், மெகுல் சர்மா மற்றும் திலீப் பரசு உட்பட பலர் இடம் பெற்று இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img