fbpx
Homeபிற செய்திகள்அரசு, தொண்டு நிறுவன இல்ல மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி...

அரசு, தொண்டு நிறுவன இல்ல மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தொண்டு நிறுவனங்களின் இல்லங்களில் வசிக்கும் மாணவர் களுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார் பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தொண்டு நிறுவ னங்களின் இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. அதற்கான துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் முன்னிலை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குத்துவிளக் கேற்றி விளையாட்டுப் போட்டி களை துவக்கி வைத்து பேசினார்.

தொடர்ந்து, மண்டல அளவிலான விளை யாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்கும் விதமாக தேசிய கொடியை ஏற்றி வைத்து சமா தான புறாக்கள், பலூன்களை பறக்கவிட்டு, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் கீதாஜீவன் ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர், ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெ றும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டி கள் மற்றும் நடனம், ஓவியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, இராமநாதபுரம், விருது நகர், மதுரை, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள இல்லங்களில் வசிக்கும் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சூர்யகலா, தூத்துக்குடி குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ரூபன்கிஷோர், என்.எல்.சி. தலைமைச் செயல் அதிகாரி அனந்த ராமானுஜம், பாரத் ஸ்டேட் வங்கி மண்டல மேலா ளர் ஆல்வின் மார்டின் ஜோசப், கைம்பெண்கள் மற்றும் ஆதர வற்ற மகளிர் நலவாரிய மாநில உறுப்பினர் சொர்ணலதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img