fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி முத்தையாபுரம் சாண்டி கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு மன்றம் துவக்கம்

தூத்துக்குடி முத்தையாபுரம் சாண்டி கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு மன்றம் துவக்கம்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக தூத்துக்குடி முத்தையாபுரம் சாண்டி கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு மன்றம் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்க ளாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தைகளுக்கு குழு தலைவர் ரூபன் கிஷோர் மற்றும் சாண்டி நிறுவனங்களின் துணைத் தலைவர் சாண்டி ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

மாணவ மாணவியர் அனைவ ருக்கும் விழிப்புணர் கையேடுகள் வழங்கப்பட்டது. குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் திட்டங்கள் கொள்கைகள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தை நல குழு தலைவர் ஆகியோரால் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. முன்னதாக குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 10 9 8 குறித்த விழிப்புணர்வு தகவல் பலகை சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது.

கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img