கோவையில் இயங்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி சார்பில் டெக்ஸ்டைல் வாக்கத்தான் நிகழ்ச்சி பந்தயசாலை பகுதியில் நடைபெற்றது. இதில் அக்கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் என பலரும் பல்வேறு விதமான உடைகளை அணிந்து கொண்டு பேரணி மேற்கொண்டனர்.
இந்நிகழ்வை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வானதி சீனிவாசன் பேசுகையில், “டெக்ஸ்டைல் இல்லாமல் கோயம்புத்தூர் விழா நடைபெறாது.
Handloom Dayவை பிரதமர் தெரிவித்ததை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 7ம் தேதி கோவை மக்கள் சேவை மையம் சார்பில் Handloom Fashion Show வை நடத்தி வருகிறோம். இந்தியாவை உலக வல்லரசு நாடாக பிரதமர் மாற்றுகிறார் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். மேலும் பெண்கள் இல்லாமல் டெக்ஸ்டைல் ஏது?, ஆண்கள் வானவில்லில் ஏழு நிறங்களை தான் காண்பார்கள் ஆனால் பெண்கள் அந்த ஏழு நிறங்களில் ஏழு லட்சம் நிறங்களை கண்டறிந்து வெளிப்படுத்தக் கூடி யவர்கள்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களி டம் அவர் கூறுகையில், “மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்னின்று டெக்ஸ்டைல் நிகழ்ச் சிகளை நடத்தினால் கோவையின் அடையாளத்தை உலகம் முழுவ தும் எடுத்துச் செல்ல முடியும்.
ஆத்துப்பாலம் பகுதியில் நேற்றைய தினம் மேம்பாலம் விரிசல் அடைந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் தரக்கட்டுப்பாடு குறை இருந்தால் அவர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை போன்று முக்கியமான இடங்களில் இருக்கக்கூடிய மாநகராட்சி ஆணை யாளர்களுக்கு வெளியூர் பணிகளை எல்லாம் அதிகமாக கொடுக்காமல் உள்ளூரில் கவனம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்“ என்றார்.