fbpx
Homeபிற செய்திகள்விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த கோவை மாநகராட்சி

விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த கோவை மாநகராட்சி

மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு கோவை மாநகராட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

அம்மாவட்டத்தில் மயிலம் பகுதியில் 51.செ.மீ., நெம்மேலியில் 46 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழக அரசு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள சூழலில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை நேரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு, கோவை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக 2500 குடிநீர் பாட்டில்கள், ரொட்டிகள், பிஸ்கட், கடலை மிட்டாய், பால் பவுடர் , சேமியா பாக்கெட் மற்றும் மிக்சர் உட்பட ரூ.3.46 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மத்திய மண்டல அலுவலகத்திலிருந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img