fbpx
Homeபிற செய்திகள்அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பெங்களூர் வளாகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான பிஜி டிப்ளமோ திட்டங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி, உள்ளடக்கிய கல்வி மற்றும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்குக் கற்பித்தல் ஆகியவற்றில் முதுகலை டிப்ளமோ கல்வித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டங்கள் பள்ளி அமைப்பில் ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களின் திறன்களை வளர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிஜி டிப்ளமோ திட்டமும் 12 வார கால அளவு கொண்ட நான்கு சான்றிதழ் திட்டங்களைக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ படிப்புகளை முழுமையாக அல்லது சான்றிதழ் திட்டங்களில் தனித்தனியாக படிக்கலாம்.

அரசு/தனியார் பள் ளிகள்/என்ஜிஓக்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் -கல்வியாளர்கள், சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் கல்வித் துறையில் பணிபுரிபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தது இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 12 ஜனவரி 2025 மற்றும் நேர்காணல்கள் ஜனவரி 2025ல் நடை பெறும். வகுப்புகள் மார்ச் 2025 இல் தொடங்கும்.

படிக்க வேண்டும்

spot_img