fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்: அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு பங்கேற்றனர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்: அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு பங்கேற்றனர்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக
கூட் டரங்கில் அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திரு க்கார்த்திகை தீபத்திருவிழா 2024 முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச் சாண்டி, இந்து சமய அறநிலையத்துறை. ஆணையர் பி.என், ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை, கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) மரு. சுகுமார்,மாவட்ட ஆட்சித்த லைவர் தெ.பாஸ்கர பாண் டியன், மாநில ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருக்கார்த் திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட் சித்தலைவர் அவர்களும் மற்றும் காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஆணையர் அவர் களும் விரிவாக அமைச்சர் பெருமக்களிடம் எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ,வேலு, சேகர்பாபு ஆகியோர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது-: திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணி கள் குறித்து தமிழ்நாடு துணை முதல்- அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் உள்பட இதுவரை 3 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது.

5-ம் திருவிழாவில் இருந்து அதிகமான ஆன்மிக பக் தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்ற ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது எனவும் நடப்பாண்டில் வருகின்ற டிசம்பர் 13 அன்று நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவினை மேலும் சிறப்பாக நடத்துவது குறித்தும், தீபத்திருவிழாவிற்கு வருகைதரும் ஆன்மீக பக்த ர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

25 தற்காலிக பேருந்து நிறுத்தங்களும், 21 ஆயிரம் கார் நிற்கும் வகையில் 120 கார் பார்க்கிங் இடங்களும், பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் 8670 வழித்தடங்களில் 3408 சிறப்பு பேருத்துகளும் இயக்கப்பட உள்ளன.

பக்தர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் தேவையான வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படவுள் ளது. ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு வேதனைக்குரிய உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆகவே திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளன்று பக்தர்கள் மலை ஏறுவதற்கு உகந்ததாக உள்ளதா என்பது குறித்து மலையின் தன்மையை ஆய்வு செய்வ தற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார் பாக சென்னை அண்ணா பல்கலைகழக பேராசிரியை முனைவர் பிரேமலதா தலை மையில் தொழில்நுட்ப வல்லு நர்கள் 8 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அதற்கான அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பித்த உடன் அது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிர்வாகம் மூலமாக பக்தர் கள் மலை ஏறுவதற்கு அனுமதிக் கப்படுவார்களா என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

மேலும் தீபத்திருவிழா அன்று திருக்கோயிலுக்குள் 11,500 நபர்கள் அனுமதிக்கலாம் என பொதுப்பணித்துறை சார் பாக ஆய்வு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பரணி தீபத்திற்கு 500 அனுமதி அட்டை ஆன்லைன் மூலமாக வழங்கப்படும், மகாதீபத்திற்கு 6000 அனுமதி அட்டை ஆன்லைன் மூலமாக வழங்கபடும்.

ஆகவே நடப்பாண்டில் பாஸ் பிரச்சனை ஏற்படாத வகையில் காவல்துறை, அற நிலையத்துறை, வருவாய் துறையினர் கோவில் நுழைவு வாயில் பகுதியில் பணியாற்ற உள்ளனர். பரணி தீபத்திற்கு 6 ஆயிரத்து 600 பேரும், மகா தீபத்திற்கு 11 ஆயிரத்து 600 பேரும் கோலிலுக்குள் அனுமதிகப்படுவார்கள். இந்த ஆண்டு ஆன்லைன் பாஸ் மற்றும் சிறப்பு பாஸ் உள்ளவர்கள் யாரும் வெளியே நிற்க வேண்டிய நிலை இருக்காது. அனுமதி சீட்டு இல்லாதவர்கள் யாரும் உள்ளே அனு மதிக்கப்பட மாட்டார்கள்.

போலி பாஸ் எவரேனும் உரு வாக்கினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த முறை அனைத்து பாஸ்களில் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட உள்ளது. 7 கவுண்டர்கள் மூலம் சோதனை செய்த பிறகே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதனால் போலி பாஸ் மூலம் யாரும் உள்ளே வருவதற்கு வாய்ப்பே இல்லை. அனைத்து திருக் கோயில்களும் கார்த்திகை தீப திருநாளில் தெய்வம் வெளிச் சத்தோடு இருக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் உத்த ரவிட்டு உள்ளார்கள்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. எம்.சுதாகர், இகாப, ம வருவாய் அலுவலர் இரா.இராப்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.மணி, இணை ஆணையர், அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் ஜோதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர.

படிக்க வேண்டும்

spot_img