fbpx
Homeபிற செய்திகள்சிக்கல் பகுப்பாய்வு வரைபடம் வரைந்த அமிர்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

சிக்கல் பகுப்பாய்வு வரைபடம் வரைந்த அமிர்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

கோவை, கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள், அதுல் கிருஷ்ணா,ஆனந்த் கார்த்திக், ஹர்ஷிதா, ஜெயப்பிரியா, இந்துமதி,கன்ஸா அகமத், நவின், ரேவந்த்,ரேஹித் கிருஷ்ணன்,ஸ்ரீ லக்ஷ்மி,வாசுகி ஆகியோர் கிராமப்புற பயிற்சியின் திட்டத்தின்கீழ், சொக்கனூர் கிராமத்தில் ஊரக மதிப்பீடு பங்கேர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்கல் பகுப்பாய்வு வரை படம் வரைந்தனர்.

இந்நிகழ்ச்சி ஊரக மன்ற அலுவலகம் முன் நடை பெற்றது. விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி மூலம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் மாணவர்கள் இப்பகுதி விவசாயிகளுக்கு தேவையான பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்கவுள்ளனர்.

மேலும் இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில், இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவராஜ், பேராசிரியர்கள் முனைவர் சத்யப்பிரியா, முனைவர் பிரியா,முனைவர் பூபதி மற்றும் முனைவர் கார்த்திக் ராஜா ஆகியோரின் வழி காட்டுதலின் கீழ் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img