வால்பாறை தொகுதி ஒன்றிய நகர பேரூர் திமுக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் அமுத பாரதி வரவேற்புரை ஆற்றினார். தொகுதி பார்வையாளரும் மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மூத்த வழக்கறிஞருமான அருள் மொழி விளக்க உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் தேவ சேனாதிபதி டி.யுவராஜ், ஒன்றிய பொறுப்பாளர் இமாலய யுவராஜ், நகரச் செயலாளர் குட்டி என்கிற சுதாகர், பேரூர் கழக செயலாளர்கள் கோட்டூர் பால்ராஜ், ஆனைமலை டாக்டர் செந்தில்குமார், வேட்டைக்காரன் புதூர் பார்த்திபன், ஒடையகுளம் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் தலைமைக் கழகத்தின் உத்தரவுப்படி வாக்காளர்கள் பட்டியலைச் சரிபார்த்து பதிவு செய்து தலைமையிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய நகர பேரூர் அளவிலான அணி அமைப்பாளர்கள் பட்டியலை விரைவில் தலைமை யிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.