fbpx
Homeபிற செய்திகள்மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ராணிப்பேட்டை கலெக்டரிடம் குவிந்த 505 கோரிக்கை மனுக்கள்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ராணிப்பேட்டை கலெக்டரிடம் குவிந்த 505 கோரிக்கை மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்தும் பெறப்பட்ட 505 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியர் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img