திருச்செங்கோடு நகராட்சி, பெரிய பாவடி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 2,807 பயனாளிகளுக்கு ரூ.7.61 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டம், கொசவம் பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வினோத் கண்ணனுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத் தின் கீழ், 35 சதவிகிதம் அரசு மானியத்தில் ரூ.4 லட்சம் தொழில் கடனுதவியாக ரூ.11.43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது: நான் கூலி தொழிலாளியாக இருந்து வந்தேன். நீண்ட நாளாக சுயமாக தொழில் தொடங்க வேண்டுமெ ன்று நினைத்து வந்தேன். தொழில் கடனுதவி அரசு மானியத்துடன் வழங்குவது தெரிந்து விண்ணப்பித்தேன்.
எனக்கு தற்போது கடனுதவி கிடைத்துள்ளது. கூலி தொழிலாளியாக இருந்த என்னை முதலாளியாக உயர்ந்துள்ளேன்.
தமிழ்நாடு முதல மைச்சருக்கு நிறைந்த மனதோடு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.