fbpx
Homeபிற செய்திகள்சேவை மையத்திற்கு சிகிச்சை உபகரணங்கள் வழங்கிய சக்திதேவி அறக்கட்டளை

சேவை மையத்திற்கு சிகிச்சை உபகரணங்கள் வழங்கிய சக்திதேவி அறக்கட்டளை

சக்திமசாலா நிறுவனத்தின் ஓர் அங்கமான சக்தி தேவி அறக்கட்டளை மூலம் ஈரோடு, தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தில் செயல்பட்டு வரும் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்திற்கு இயன்முறை சிகிச்சை உபகர ணங்கள், தொழில்சார் பயிற்சி உபகரணங்கள் மற்றும் பேச்சு பயிற்சி அறைக்கான பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

அதில் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர் கள் முனைவர் துரைசாமி மற்றும் முனைவர் சாந்தி துரைசாமி விழாவினை தலைமையேற்று உபகரணங்கள்
வழங்கினார்கள்.

ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்க டேஷ் உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் சசிரேகா மற்றும் தொடக்க நிலை இடையீட்டு சேவை மைய பொறுப்பாளர் டாக்டர் சீனிவாசன் ஆகியோர் உபகரணங்களை பெற்றுக்கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img