கோவையில் நடைபெற்ற சர்வதேச பருத்தி கவுன்சில் கூட்டத்தில், பருத்திக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க புதிய தர அளவீட்டு கருவி அறிமுகம்
செய்யப்பட்டது.
ஜவுளித்துறையின் சிறப்பான வளர்ச்சிக்கான நவீன முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்ட பருத்தி தினம் 2024 நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
சர்வதேச பருத்தி கவுன் சில் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் கவனம் செலுத்துதல், உலகள £விய பருத்தி உற்பத்தியில் அமெரிக்க பருத்தி மற்றும் இந்திய ஜவுளித் துறையின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் இதில் தொழில் துறையின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வெற்றியை ஊக்கு விக்கும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்தும் முக்கிய விவாதங்கள் இடம்பெற்றன.
முன்னதாக பருத்தி கவுன் சில் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், காட்டன் யுஎஸ்ஏ-ன் தெற்காசியாவிற்கான விநியோகப் பிரிவு இயக்குனர் வில்லியம் பெட்டன்டோர்ப், சுபிமா தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் லெவ்கோவிட்ஸ், சர்வதேச பருத்தி கவுன்சில் பிரதிநிதி பியூஷ் நரங் மற்றும் ஹில் அண்ட் நோல்டன் இயக்குனர் இவா மரியா பில்லே ஆகியோர் பேசினர்..
இது போன்ற கூட்டங்களால் இந்திய ஜவுளி ஆலைகளுக்கும், இது சார்ந்த நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளையும் வழங்கும் எனவும்,தற்போது அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நவீன தொழில் நுட்பங்களின் வரவு பயனளிப்பதாக கூறினர்.
மேலும் நீளமான இழைகள் கொண்ட பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கப்பட்டதன் காரணமாக உயர்தர யு.எஸ். பிமா பைபரை இந்திய ஆலைகள் எளிதில் வாங்குவதோடு, உலக அளவில் போட்டித் தன்மை நிறைந்த ஜவுளித் துறையில் மேம்பட்ட தயாரிப்புகளை வழங்க முடிவதை சுட்டி காட்டினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில், காட்டன் யு.எஸ்.சார்பாக புதிய தர அளவீட்டு கருவி அறிமுகம் செய்யப்பட்டது.