வி.எஸ் மருத்துவமனை, சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து, டிசம்பர் 23 மற்றும் 24 அன்று நடத்தப்பட்ட “நில் மற்றும் கவனி” (“STOP and WATCH”) போக்குவரத்து விழிப்புணர்வு பிரசாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
சென்னை முழுவதும் 50 முக்கிய சிக்னல்களில் இரண்டு நாள் பிரசாரத்தின் போது, 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரி களுடன் சிறந்த சாலை பாதுகாப்பு நடத்தையைக் பின்பற்றியவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் சென்னை போக்குவரத்துக் கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் பிரசாரத்தின் தாக்கம் குறித்து பேசினார்.
வி.எஸ் மருத்துவமனைகளின் நிறுவனத் தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், “நில் மற்றும் கவனி பிரசாரம் வெறும் சாலை பாதுகாப்பு முன் முயற்சி மட்டுமல்ல, இது பொது சுகாதாரம் மற் றும் பாதுகாப்பிற்கான எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகு தியாகும்“ என்றார்.
மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.சுந்தர், மற்றும் நிர்வாக இயக்குநர் முத்து சுப்ரமணியன் ஆகியோர் பிரசாரத்தின் காலத்திற்கேற்ற செய்தி மற்றும் வரவேற்பை குறிப்பிட்டனர்.