fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கி பேசுகையில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் நாள்தோறும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து குழந்தைகள் முறையாக அங்கன்வாடி மையங்களுக்கு குறித்த நேரத்தில் வருகை புரிகிறார்களா? என்பதையும் வருகை பதிவேடும் வழங்கப்படும் உணவுகளும் சரியாக இருக்கின்றதா? என்பதையும் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்கின்றார்களா? என்பதையும் முறையாக கண்காணிக்க வேண்டும்.
கடைசி நேரத்தில் மருத்துவமனைகளில் பிரச்சனைகள் வராத வண்ணம் தொடக்க நிலையிலே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்று கூறினார்.

முன்னதாக, போசன் அபியான் திட்டத்தில் வழங்கப்படும் ஊட்டச் சத்துக்கள் குறித்தும், நாள்தோறும் பதிவு செய்யும் நிலைகள் குறித்தும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவுகள் குறித்து வீடு வீடாக சென்று தெரிவிப்பது குறித்தும் வட்டாரங்கள் வாரியாக கேட்டறிந்தார்.

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கிய விவரங்கள் குறித்தும். குழந்தைகளின் தற்போ தைய நிலை குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

மேலும், கர்ப்பிணி தாய்மார்களையும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களையும் தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் கர்ப்பகால நடைமுறைகள் பின்பற்றுவது குறித்தும், கண்காணிக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளையும் இவைகளில் மிகவும் பாதிக்க ப்படக்கூடிய கர்ப்பிணிகள் அவர்கள் தொடர் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நடவடிக்கைகளையும் கேட்டறிந்தார்.

மேலும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவ லர்கள். மேற்பார்வையா ளர்கள், ஒருங்கி¬ ணப்பாளர்கள் ஆகியோர் நாள்தோறும் தங்கள் வட்டார பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று ஆய்வு செய்ததன் அறிக்கைகள், கண்ட றியப்பட்ட குறைபாடுகள் குறித்து விரிவாக கேட்டிருந்தார்.

மேலும் அங்கன்வாடி மையங்கள் கட்ட வேண்டிய கட்டிடங்களில், தற்பொழுது கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையங்களின் நிலைகள் குறித்து வட்டாரங்கள் வாரி யாக கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img