fbpx
Homeபிற செய்திகள்மேச்சேரியில் ரூ.96.10 கோடிக்கான வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

மேச்சேரியில் ரூ.96.10 கோடிக்கான வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தா தேவி செய்தியாளர் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன் றியத்தில் கடந்த 3 லு ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட் கட்டமைப்புத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் மூலம் ரூ.96.10 கோடி மதிப்பீட்டிலான 3,062 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 2,274 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 788 பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், இன் றைய தினம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளார் ஊராட்சியில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் எருமாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வரு வதையும், குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் ரூ.28.35 லட்சம் மதிப்பீட்டில் கட் டப்பட்டுவரும் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடப் பணிகளும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளார் ஊராட்சி, எரு மாப்பட்டியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங் கன்வாடி மையக் கட்டடப் பணிகளும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.7.96 லட்சம் மதிப்பீட்டில் எருமாப்பட்டி, குட்டப் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முதல்வரின் கிராம சாலைகள் மேம் பாட்டுத்திட்டத்தின் கீழ் புக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் புக்கம்பட்டி சாலை முதல் சுமைதாங்கி வரை 2.50 கி.மீ தூரத்திற்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை ஆய்வு செய்து, சாலையின் தரம், அகலம் மற்றும் தடிமன் உள்ளிட்டவை சரியான அளவில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நபார்டு திட்டத்தின் கீழ் கொப்பம்பட்டி மற்றும் எம்.காளிப்பட்டி ஊராட் சியில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கொப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.14.25 லட்சம் மதிப் பீட்டில் சமுதாய குளம் அமைக்கப்பட்டுவரும் பணிகளும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பானாபுரம் மற்றும் குட்டப்பட்டி ஊராட்சிகளில் வீடுகள் கட்டும் பணிகள் என மொத்தம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 14 வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img