fbpx
Homeபிற செய்திகள்மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி

மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி

ஒவ்வொரு ஆண்டும் 14.12.2024 முதல் 20.12.2024 வரை தேசிய மின்சார சிக்கன வாரம் கொண்டாடப் பட்டுவருகிறது. இந்த வருடம் அதனை முன்னிட்டு மின்சார சிக்கனத்தை வலியுறுத்தியும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறை களை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம். தூத்துக் குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி 110கே.வி நகர் துணை மின் நிலையத்தில் மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷ் மூர்த்தி, மின்சார சிக்கன வார விழா பேரணியை கொடிய சைத்து துவக்கிவைத்தார்.
பேரணியில் 300க்கும் மேற்பட்ட காமராஜ் கல்லூரி, வ.உ.சி. கலை கல்லூரி, செயிண்ட் தாமஸ் உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் பணிபுரியும் பொறியாளர்கள், அலுவலர் கள், களப்பணியாளர்கள் அனைவரும் திரளாக பேரணியில் கலந்துக் கொண்டனர்.

பேரணி தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து துவங்கி புதிய பேருந்து நிலையம், போல் பேட்டை ரவுண்டானா வழியாக மீண்டும் நகர் துணை மின் நிலையம் வந்தடைந்தது. பேரணி செல்லும் வழியில் மின் சிக்கனம் சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் விநி யோகிக்கப்பட்டது. மின் சிக்கனம் தொடர் பான கோஷங்கள் எழுப்பப் பட்டது. இந்நிகழ்ச்சிகளை செயற்பொறியாளர்கள் ரொ.ரெமோனா மற் றும் சின்னதுரை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். உதவி செயற்பொறியாளர்கள் வேலாயுதம். ஆறுமுகம், உமையொருபாகம், சுடலைமுத்து, பிரேம், ரவீந்திரகுமார். ஜெயக்கு மார் மற்றும் உதவி பொறியாளர்கள் சுதா, முருகப்பெருமாள், சரண்யா, கணேசன், குமார் சகாயமங்களராணி, நாகராஜன், சொரிமுத்து, மணிசேகர், ராஜேஸ், நாகராஜன், பெருமாள், ஜெயா, விஜயலெட்சுமி ஆகி யோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img