கோவை ஈஷா அறக்கட்டளை மூலம் தொண்டாமுத்தூர் பகுதி மக்கள் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்புகளை நேர டியாகவும், மறைமுகமா கவும் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு நன்றி தெரிவிக் கும் விதமாக தொண்டாமுத்தூர் வட் டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக் கணக்கானோர் இணைந்து “சத்கு ருவின் குடும்பத் திருவிழா “ என்னும் தலைப்பில் வரும் 5ம் தேதி நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடத்த உள்ளனர். இது குறித்து விழா குழு ஏற்பாட்டு தலைவர் குமார் கூறியதாவது:
கோவை மாவட்டம் மத்துவராயபு ரத்தில் நடைபெறும் இவ்விழாவில் தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. வேலுமணி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் தொண்டாமுத் தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களின் கீழ் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மாலை 5 மணியளவில் ஈஷா பிரம்மாசாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும், அதை தொடர்ந்து பேரூர் ஆதீனம் அவர்களின் அருளுரையும் நடைபெற உள்ளது. முன்னதாக, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தொண் டாமுத்தூர் பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து ஊர் மக்களும் கலந்து கொள்ளலாம். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.