fbpx
Homeபிற செய்திகள்ஆராய்ச்சிக்காக ரூ.1 கோடி மானியம் பெற்ற கோவை கேபிஆர் கல்லூரி

ஆராய்ச்சிக்காக ரூ.1 கோடி மானியம் பெற்ற கோவை கேபிஆர் கல்லூரி

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் 2024ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் சாதனைகளை நினைவு கூறும் விதமாக ‘குட் பை 2024’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கே.பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆண்டு முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகள், விழாக்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரி யர்களின் சாதனைகள் அடங்கிய காணொளி வெளியி டப்பட்டது.
இதில் கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன், செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் டிஆர்டிஓ வின் தொழில்துறை மற்றும் கல்வித்துறை அதிநவீன ஆய்வகத்தின் இணை இயக்குநர் முனைவர் கதிர்வேலு மற்றும் சன் தொலைக்காட்சி நட்சத்திரம் பட்டிமன்ற பேச்சா ளர் அருண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
முனைவர் கே.பி ராமசாமி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி ஆசிரியர்களிடத்தில் மட்டுமே உள்ளதென்று குறிப்பிட்டு நடைமுறைக் கற்றலை வலியுறுத்திப் பேசினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் கேபிஆர் பொறியியல் கல்லூரியின் 2025 இலக்குகளைப் பற்றி எடுத்துரைத்து, கடந்தாண்டு பல்வேறு ஆராய்ச்சியில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மானியம் பெறப்பட்டதை குறிப்பிட்டு அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img