fbpx
Homeபிற செய்திகள்நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, மருளு காரன்கொட்டாய் கிராமத்தில் 15வது நிதி குழு மானிய
திட்டத்தில் ரூ.6.35 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் நீட்டிப்பு செய்தல் மற்றும் இதே கிராமத்தில் மனைப்பிரிவு திட்ட நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இரண்டு பணிகளையும் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் ரம்யாகுமார், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, பசுமைத் தாயக ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க ஒன்றிய செயலாளர் வேலுசாமி, வார்டு மன்ற உறுப் பினர் வேலுசாமி, நிர்வாகிகள் அல்லிமுத்து, ராஜேந்திரன், மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img