பொங்கல் பரிசு தொகுப்புடன் மக்களுக்கு ரூ.1000 வழங்க கோரியும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும், மது இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி அண்ணா நகரில் மாவட்டக் கழகச் செயலாளர் எம். தயாள லிங்கம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழக அவைத் தலைவர் எம். அலெக்சாண்டர் கண்டன உரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர் ஆர். ஆனந்த் அருணா எழுச்சி உரையாற்றினார். மாவட்டக் கழக பொருளாளர் எஸ்.ஜே. விஜயன் வரவேற்புரையாற்றினார்.
உடன் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், மற்றும் மாவட்ட கழக சார்பு அணி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.