fbpx
Homeபிற செய்திகள்பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சேலம் தேமுதிக...

பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சேலம் தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர தேமுதிக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவாசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உறுவாக்கவும், அரசு பள்ளிகளை தனியாருக்கு வழங்க முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்தும் சேலம் மாநகர தேமுதிக சார்பில் சேலம் கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் கண்டன உரை நிகழ்த்தினார்.

செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார் மாநகர மாவட்ட அவை தலைவர் செல்வகுமார் மாநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் சீனிவாசன் ராஜு சுகுமார் பேபி வெங்கடாஜலம் செயற்குழு உறுப்பினர் முரளிதரன் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசே கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்

இதனைத் தொடர்ந்து கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் செய்தியாளிடம் கூறும் போது தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை ஆளுகின்ற திமுக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது குற்றம் சுமத்தப்பட்ட நபர் திமுக பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்

எனவே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் உள்ளது எனக்கூறி ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்காமல் ஏமாற்றி உள்ளனர்.

இதனை நம்பி உள்ள ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாயை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவசாயிகளுக்கும் நிவாரண தொகையை வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

அதனையும் வழங்கிட வேண்டும் போதை இல்லாத தமிழகம் எனக்கூறி திமுக அரசு தற்போது தமிழக முழுவதும் போதை பொருளின் கூடாரமாக உள்ளது இதனையும் கண்டுகொள்ளாமல் திமுக அரசு செயலாற்றி வருகிறது.

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது வரும் ஆட்சியில் திமுகவை விரட்டும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.நாராயணன், நீலமேகம், ஏழுமலை, சந்தானம், செயலாளர் பன்னீர்செல்வம், பகுதி செயலாளர்கள் காத்தவராயன், அன்பழகன் என்கின்ற ராஜா, செல்வகுமார், விஜய் சேகர், செந்தில்குமார், சேலம் மேற்கு ஒன்றியம் அப்பாவு, ஓமலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வனேசன், கள்ளக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் கார்த்தி வேல், 31 வது வட்ட செயலாளர் சபி அகமத் உள்ளிட்ட மாநகர் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி &வர்த்தகர் அணி &தொண்டர் அணி &தொழிற்சங்க அணி என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img