கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோவை மாநகரில் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு மாநகர போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போக்குவரத்து விதி முறைகள் குறித்து விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதனிடையே மாநகர காவல்துறை சார்பில் 36-வது சாலை
பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா புலியகுளம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் பள்ளியில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து உரையாற்றினார்.
பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலை விழிப்புணர்வு குறித்து உதவி ஆணையர் சேகர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.