ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரும்களை திறந்து வெற்றி கண்டுள்ளது.
மேலும் உலகெங்கும் பரவியுள்ள தமிழருக்காய் இணைய தளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியதோடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது புதிய ஷோருமை சுந்தராபுரத்தில் துவங்கி உள்ளது. இதனை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் திறந்து வைத்தார். சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனை மருத்துவர்
குந்தவி தேவி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
அபிராமி குழும நிறுவனங்கள் சேர்மன் மருத்துவர் பெரியசாமி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஆனைமலை டொயோட்டோ துணை தலைவர்
பிரசாத் கிருஷ்ணன் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
ஹீரோ பேஷன்ஸ் சுந்தரமூர்த்தி மற்றும் ராம்ராஜ் காட்டன் நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் வரவேற்றார்.
ராம்ராஜ் காட்டன், உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும் மிருதுவான பருத்தி நூலிழைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட துணிரகங்களிலிருந்து முன்னணி வல்லுநர்களை கொண்டு வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது என நிகழ்வில் தெரிவித்தனர்.