கடந்த டிசம்பர் 2024ல் இதயத்த மனி அடைப்பின் காரணமாக, இதயத்தின் கீழ்ப்புற அறைகளை பாதிக்கின்ற மாரடைப்பிற்கான ஸ்டெமி சிகிச்சையில் வடபழனி காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் மாரடைப்பு நேர்வில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளைப் பொறுத்தவரை 15 நபர்களில் 8 நபர்களுக்கு வலது கரோனரி தமனி முதன்மை காரணியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
இதில், மருத்துவமனைக்குள் நோயாளி அனுமதிக்கப்படுவதிலிருந்து ஆஞ்சியோபிளாஸ்ட்டி இடையீட்டு சிகிச்சையை தொடங்குவதற்கு எடுக்கும் நேரத்தில் எட் டப்பட்டிருக்கும் முன்னேற்றம் இந்த மாதத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.
உலகளவில் இதற்கான நேரம் 90 நிமிடங்களாக இருக்கின்ற நிலையில் அதைவிட கணிசமாக குறைந்த நேரமான வெறும் 49 நிமிடங்கள் என்ற சராசரி காலஅளவே காவேரி மருத்துவமனையில் D2B நேரமாக இருக்கிறது. இதன்மூலம் ஒரு புதிய தர அளவு கோலை காவேரி மருத்துவமனை வடபழனி நிறுவியிருக்கிறது.
இது குறித்து காவேரி மருத்துவ மனையின் முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் புரொஃபசர் மனோகர் கூறுகையில்,
‘’எமது D2B காலஅளவில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றம், எமது ஒட்டுமொத்த குழுவினரின் திறனையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. காலஅளவை 49 நிமிடங்களாக குறைத்திருக்கும் எமது திறன் ஒரு முக்கிய மைல்கல் சாதனையாகும் என்றார்.
இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணர் மற்றும் குருதிக்குழாய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சுந்தர் பேசுகையில், “சென்னையில் மாரடைப்பு நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைக்குரிய உரியமுதன்மை மருத்துவமனையாக காவேரி மருத்துவமனையை நிலைநிறுத்தியிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் மருத்துவமனையின் சாதனைகள் குறித்து தனது பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.