fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரி நிறுவனத்தில் முதல் பட்டமளிப்பு விழா எஸ்என்ஆர் கலைய ரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கங்கா மருத்துவமனை தலைவர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கை அறுவை சிகிச்சை, மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை, தீக்காயங்கள் துறை தலைவர் மருத்துவர் ராஜா சபாபதி பங்கேற்றார்.
விழாவின் தலைமை யுரையை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் வழங்கினார். மேலும் இவ்விழாவில் தலைமை அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜ கோபால், மருத்துவ கண் காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், கல்லூரி முதல்வர் டாக்டர் சத்யா ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பித்த னர். இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இளங்கலை இணை மருத்துவ அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றனர். மேலும் துறைவாரியாக கல்லூரியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img