கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வரு கிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான குறை கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி,பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் முதி யோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 503 மனுக்கள் அளித்தனர்.
அப்போது இதில் விருத்தாசலம் அருகே உள்ள கர்ணத்தம் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள், தங்கள் கிராமத்தை மங்கலம் பேட்டை பேரூராட்சியுடன் இணைக்கக்கூடாது என்று கூறி மனு அளித்தனர்.
தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப் பட்ட 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.16 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை வழங்கி னார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடேசன்,துணை ஆட் சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ, உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, தனித்துணை ஆட்சியர் ரமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.