fbpx
Homeபிற செய்திகள்மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத் தில் பயனடைந்துவரும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று திட்டத்தின் செயல்பாடு முழுமையாக பெற்று பயனடைந்து வருகின்றார்களா?என்பதை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுநாள் வரை யில் 3,12544 நபர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மருத்துவக் குழுவினர் 61 பொதுமக்களுக்கு கேன்சர்நோய் பரிசோதனை மூலம் கண்டறிந்து தொடர் சிகிச்சை அளித்து கண் காணித்து வருகின்றனர்

இந்நிலையில், இராணிப் பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா நெமிலி வட்டம் கீழ் வீதி காலனி பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் படவேட்டம்மாள் க/பெ. திருநாவுக்கரசு (58) என்கிற பெண்மணி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வீட்டிற்கே மருத்துவ குழு வருகை தந்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சிகிச்சை அளித்து பயன்பெற்று உடல் நிலை தேறி வருவதையும், அதேபோன்று, மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பவானி க/பெ பரந்தாமன் (54) என்கிற பெண்மணி தொற்றா நோய் சர்க்கரை இரத்த கொதிப்பு நோய்க்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவ குழு வீட்டிற்கே வருகை தந்து சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கி வருவதால் கிடைக்கப்பெற்ற பயன் குறித்தும் நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக நேரில் சந்தித்து திட்டத்தினை விவரித் தார்கள். தொடர்ந்து பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

இத்திட்டத்தின் மூலம் பயன டைந்து வரும் பயனாளிகள் தெரிவித்தாவது:-
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், மருத்துவ குழுவினர் நேரடியாக வீட்டிற்கு வந்து நோயாளியை கண்டறிந்து உரிய மருந்து மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சி, பிசியோதெரபிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை கொ டுத்து வருகின்றனர்.

தற்பொழுது படுத்த படுக்கையாக இருந்தவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய கட்டமைப்பை கொண்டு நாள் தோறும் உடற்பயிற்சி செய்து தானே எழுந்து நடந்து நிற்கும் அளவிற்கு இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். மேலும் எங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
இராணிப்பேட்டை மாவட்டத் தில் மக்களைதேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 185 மகளிர் சுகாதார தன்னார்வாவர்கள் (WHV), மகளிர் மேம்பாட்டு கழகத்தின் (TNCDW) மூலமாக நியமிக்கப்பட்டு, நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சைகள், மருந்துகள் வழங்கப்பட்டு இத் திட்டம் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகின்றது.

இராணிப்பேட்டை மாவட் டத்தில் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,33,362 நபர்களும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 73,871 நபர்களும், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 58,370 நபர் களும், நோய் ஆதரவு மற்றும் சிகிச்சை 13,172 நபர்களும், இயன்முறை மருத்துவம் 33,769 நபர்களும் என மொத்தமாக 3 இலட்சத்து 12 ஆயிரத்து 544 நபர்கள் சிகிச்சைகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

மேலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 19, மார்பக புற்றுநோய் 21, வாய் புற்றுநோய் 21 என மொத்தமாக 61 பொதுமக்களுக்கு கேன்சர் நோய்
பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை அளித்து கண்காணிப் பட்டு வருகிறது.

இத்திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். பொதுமக்கள் மனமகிழ்ச்சியுடன் இத்திட்டத் தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.மேகலா, பிசியோதெரபிஸ்ட் பூர்ணிமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img