fbpx
Homeபிற செய்திகள்விமானநிலையம் அருகே வயர்லெஸ் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி மண்டலத்தின் 67 வது புதிய...

விமானநிலையம் அருகே வயர்லெஸ் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி மண்டலத்தின் 67 வது புதிய கிளை திறப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- திருச்சி மண்டலத் தின் 67வது புதிய கிளை, திருச்சி, வயர்லெஸ் ரோட் டில் திறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளைகள் பல்வேறு பகுதிகளில் சிறப்புற செயல்பட்டு வருகின்றன.
இதனால் அதிக அளவில் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மேலும் தனது சேவையினை அதிகரிக்கும் வகையில், திருச்சி விமான நிலையம் அருகில் காவேரி நகர் விரிவாக்கம், வயர்லெஸ் சாலையில், மண்டலத்தின் 67-வது புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் மையம், லாக்கர் மற்றும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய இந்த கிளையை திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பொது மேலாளர் எஸ்.முத்துமாரி, திருச்சி கே.கே.நகர், எம்கேபி குழும நிறுவனங்களின் தலைவர் ஐ.ஷாஜஹான் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் ஜி.ஸ்ரீராம் வங்கியின் சேவைகளை எடுத்துரைத்து வாடிக் கையாளர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். குறைந்த வட்டியில் நகைக்கடன் தாராள மாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விழாவில் வங்கியின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் கலந்து கொண்டவர்களை கிளை மேலாளர் ஸ்ரீனி வாஸ் ராவ் ரத்தோட் வரவேற்றார். இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் வங்கியின் சார்பில் பொது மக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பயன டைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img