fbpx
Homeபிற செய்திகள்ராயல் கேர் மருத்துவமனையில் ஆராய்ச்சி முறை விளக்க பயிலரங்கம்

ராயல் கேர் மருத்துவமனையில் ஆராய்ச்சி முறை விளக்க பயிலரங்கம்

கோயமுத்தூர் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மருத்துவத்துறை சார்பில் ஒரு நாள் ஆராய்ச்சி முறை விளக்க பயிலரங்கம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதில், கோவை உட்பட பல்வேறு மருத்துவமனை களில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்கத்தில் டெல்லி யில் உள்ள விஎம் எம்சி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனை யின் தீவிர சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் அனிர்பான் ஹோம் சௌதுரி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் கபில் தேவ் சோனி மற்றும் அட்வான்ஸ்டு ஹெல்த்கேர் பவுண்டேஷன் இயக்குநர் டாக்டர் ஸ்ரேயா சட்டோ பாத்யாய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங் கேற்று, ஆராய்ச்சி முறை கள் குறித்து முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மருத்துவத்துறையின் தலைவர் டாக்டர் எம்.என். சிவகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வு ஆராய்ச்சி யில் செயல்படும் இளம் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு மிக முக்கியமான பயிலரங்கமாக அமைந்தது.

படிக்க வேண்டும்

spot_img