fbpx
Homeபிற செய்திகள்சாத்தனூர் அணையின் அணைக்கட்டில் இருந்து 110 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையின் அணைக்கட்டில் இருந்து 110 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம் பட்டு வட்டம், சாத்தனூர் அணையின் பிக் கப் அணைக்கட்டில் இடது மற்றும் வலது புறகால் வாய்களில் இருந்து விவசாய பாசனங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்து வைத்தார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டி உடன் இருந்தனர்.

இது குறித்து பொதுப் பணித்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந் துள்ள சாத்தனூர் அணையிலிருந்து வருடந் தோறும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறு வார்கள்.

சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119 அடியாகும். கடந்த ஆண்டில் பெய்த தொடர் கனமழையின் விளைவாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் பெய்த கனமழையின் விளைவாகவும் சாத்தனூர் அணையின் முழு கொள்ளவு நிரம்பி, 1 லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இடதுபுற கால்வாயிலி ருந்து வினாடிக்கு 320 கனஅடியும், வலதுபுற கால்வாயிலிருந்து வினா டிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் தற்போது முதல் 17.05.2025 வரை 110 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணிர் திறந்து விடப்படும்.

தற்போது, திறந்துவிடப் படும் நீரானது 25 நாட்களுக்கு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 46 கிராமங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 58 கிராமங்களும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் உள்ள மொத்தம் 119 கிராமங்கள் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும். ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களின் உற்பத்தியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img