நுகர்வோர் பாதுகாப்பு விருதுகள் நாமக்கல் மாவட்டம் 2023-24 ஆம் ஆண்டில் முதல் பரிசு மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பொது விநியோகம் திட்டம் தொடர்பான பணிகளில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில் மூன்றாம் பரிசு, 2023-24 ஆம் ஆண்டில் முதல் பரிசு பெற்றதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுதானிய உணவு திருவிழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமாவுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2022-23 ஆம் ஆண்டு 83 ”குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்” பள்ளி மற்றும் கல்லூரியில் நிறுவப்பட்டு மாணாக் கர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறும் அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் பயன்பாடு குறைபாடு மற்றும் புகார்கள் ஏற்படும் பட்சத்தில் விழிப்புணர்வு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் எவரிடம் புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2022-23 ஆம் ஆண்டில் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் நுகர்வோர் குறை பாடுகள் சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்கள் மீது 96 சதவீதமும், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் 100 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளன.
மேலும் பொதுவிநியோக திட்ட குறை பாடுகள் குறித்து பெறப்பட்ட புகார் மனுக்கள் 100 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளன. மாநில நுகர்வோர் சேவை மைய அமைப் பிலிருந்து பெறப்பட்ட பொது விநியோகத் திட்ட குடும்ப அட் டைகள் குறித்து வரப்பட்ட புகார்கள் 100 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளன.
2023 – 23 ஆம் ஆண்டில் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட பொருட்கள் 1,57,178 கிலோ கைப் பற்றப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன.
2023-24 ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தகவல் அடங்கிய டிஜிட்டல் பலகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
2023-24 ஆம் ஆண்டில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக் களும், பொது விநியோகத் திட்ட குறைபாடுகள் குறித்து பெறப்பட்ட மனுக்கள் மீதும், நுகர்வோர் சேவை மைய அமைப்பிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதும் 100 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளன.கடந்த 01.12.2023 அன்று சிறு தானிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு பல்வேறு துறைகள் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
மேலும், சித்த மருத்துவத்துறை யில் அமைக்கப்பட்ட அரங்கில் சிறுதானியங்களின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து எடுத்து ரைக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் இயங்கி வரும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணாக்கர்களிடையே கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டன.
2023-24 ஆம் ஆண்டில் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் பாமாயில் உள் ளிட்ட பொது விநியோகத் திட்ட பொருட்கள் 77,271 கிலோ கைப்பற்றப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கான விருது , கேடயத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி வழங்கி பாராட்டினார்.