கோவை கரும்புக்கடை பகுதியில் நடைபெற்ற இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் 45 வது ஆண்டு விழா நேற்று (29ம் தேதி) நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சாரம் மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), இஸ்லாமியா கல்வி டிரஸ்ட் சேர்மன் முகமது அனீபா, துணை சேர்மன் பி.எஸ்.உமர்பரூக், தாளாளர் ஹக்கீம்,இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா ராணி, இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசி ரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.