தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மன் பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா நிறைவு விழா, பொன்விழா மலர் வெளியீட்டு விழா, சமய நல்லிணக்க விழா, பட்டமளிப்பு விழா இணைந்த விழாக்கள் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு விழாக்குழு தலைவரும் ஜாமியா பள்ளிவாசல் தலைவருமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மீராசா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சகாப்தீன். செயலாளர் அபூபக்கர், அப்துல் ரகுமான், சலாஹுத்தீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கல்லூரி துணை முதல்வர் அஸ்ரார் அகமது வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பி. ஆகியோர் பங்கேற்று பேசினர்.
அடையாறு பள்ளிவாசல் சதீதுத்தீன் சிறப்புரையாற்றினார். அரபிக்கல்லூரி பொருளாளர் சையது சுலைமான் நன்றி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன். மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.