fbpx
Homeபிற செய்திகள்2025ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு

2025ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 கல்லூரிகள், 42 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு தட்ப வெப்ப பகுதி களுக்கேற்ப புதிய ரகங்கள் உரு வாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வருடந்தோறும் விவசாய பெரு மக்கள் பயன்பாட்டிற்கு புதிய ரகங்கள் வெளியிடுவது வழக்கம்.

100 வருடத்திற்கும்மேல் பழமைவாய்ந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் திலிருந்து இதுவரை பல்வேறு பயிர்களில் 929 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பல்கலைக்கழகத்திலிருந்து வெளியான பெரும்பாலான ரகங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விவசாயி களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வருடம் வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக் கலைப்பயிர்கள் உள்ளடக்கிய சுமார் 19 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டு குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிக ளுக்கு வழங்கப்படுகிறது.
வேளாண் பயிர்களில், நெல்லில் மூன்று ரகங்கள். (நடுத்தர குட்டை மற்றும் வறட்சியை தாங்கும் கோ 59, நடுத்தர சன்ன ரகங்கள் ஏடிடீ 56 மற்றும் ஏடிடீ 60). மக்காச்சோளம் கோஎச்(எம்) 12. இறவைக்கும் நெல் தரிசுக்கும் ஏற்ற உளுந்து வம்பன் 12. வறட்சியை தாங்கவல்ல நிலக் கடலை சிடிடீ 1 மற்றும் நடுத்தர உயரம் கொண்ட வீரிய ஒட்டு ஆமணக்கு ஒய்ஆர்சிஎச் 3 ஆகிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தோட்டக்கலைப்பயிர்களில் நான்கு காய்கறிப் பயிர்கள் தக்காளி கோ 4, வீரிய ஒட்டு வெண்டை கோ (எச்) 5, மிள காய் கோ 5 மற்றும் சாம்பல் பூசணி பிஎல்ஆர் 1 வெளியிடப் பட்டுள்ளன.
பழப்பயிர்களில், திருச்சிராப் பள்ளி, தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள வாழை காவேரி வாமன் உட்பட வெண்ணெய்ப்பழம் டிகேடி 2 மற்றும் எலுமிச்சை எஸ்என்கேஎல் 1 வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு மலர் பயிர் (அரளி தோவாளை 1). ஒரு தென்னை (ஏஎல்ஆர் 4), ஒரு நறுமணப் பயிர் (ஜாதிக்காய் பிபிஐ 1), ஒரு மூலிகைப்பயிர் சிறுகுறிஞ்சான் கோ 1 வெளியிடப்பட்டுள்ளன. இது மட்டு மின்றி. சிப்பிக்காளா னில் கேகேஎம் 1 என்ற ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாய பெருமக்கள் புதிய ரகங்களை சாகுபடி செய்து பயன்பெறுமாறு ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் ரவீந்திரன், முனைவர் ஐரின் வேத மணி ஆகியோர் கேட்டு கொண்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img